கோட்டாபய ராஜபக்ச மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக கனடா விதித்துள்ள தடைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் சிறுவர்களை படையணியில் சேர்த்தனர் அனைத்து இனத்தையும் சேர்ந்த பொதுமக்களை அதிகாரிகளை கொலை செய்தனர் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை மூன்று தசாப்தகாலமாக அவர்களின் அநீதியை எதிர்கொண்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவிற்கு தீர்மானம் எடுப்பதற்கான இறைமையுடன் கூடிய உரிமையுள்ள அதேவேளை தகவல்களை ஆராயும் போது இரகசிய நிகழ்ச்சி நிரல்கள் இருவகையான தராதரங்கள் காணப்படுவது குறித்து ஏமாற்றமடைந்துள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.