ஹங்வெல்ல நகரின் உணவக உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஹங்வெல்ல நிரிபொல பிரதேசத்தில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 18 ஆம் திகதி இரவு சிகரெட் வாங்க மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் கடைக்குள் புகுந்து உணவக உரிமையாளர் முகமது பர்ஹான் (46) என்பவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.
கொல்லப்பட்ட நபர் ஹங்வெல்ல பொலிஸ் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினராவார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட மேற்கு-தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள், கொலை சம்பவத்துக்கு உதவிய மேலும் இருவரை கைது செய்தனர்.