நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மருந்து பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக மருத்துவ நோயாளிகளின் மரணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், பல வகையான புற்றுநோய் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் வைத்தியசாலைகளில் கிடைப்பதில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை பெற்றுக் கொள்வதற்காக வந்த நோயாளர்கள் மருந்துகள் கிடைக்காததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், மருந்துப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.