Our Feeds


Sunday, January 15, 2023

Anonymous

முஜிபுர் ரஹ்மானின் பாராளுமன்ற பதவிக்கு பௌசி அல்லது ஹிருனிகா!

 




கொழும்பு மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளார்.


தமது கட்சியின் சார்பில் கொழும்பு மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியிட ரஹ்மானை முன்னிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.

இந்தநிலையில் கொழும்பு மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் கொழும்பு மாவட்ட சக உறுப்பினருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


முஸ்லிம் சமூகம், தமக்காக மிகவும் உரத்துப்பேசும் பேச்சாளரைத் தவறவிடும். எனினும், அவர் வெற்றி பெறுவார் என்பதில் எமக்கு நம்பிக்கை உள்ளது. நமது நஷ்டம், நகரத்துக்கு நன்மை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ட்வீட் செய்துள்ளார்.


முஜிபுர் ரஹ்மான் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அவருடைய நாடாளுமன்ற ஆசனம் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அடுத்த வரிசையில் இருக்கும் ஏ.எச்.எம்.பௌசி அல்லது ஹிருணிகா பிரேமச்சந்ரவால் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »