பிரபல அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் விபசார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி, தங்கொல்ல பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதியே இவ்வாறு சுற்றிவளைத்து இரண்டு பெண்களையும் முகாமையாளரையும் கைது செய்துள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் தம்புத்தேகம மற்றும் மாத்தளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் 35 மற்றும் 38 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டியைச் சேர்ந்த பலமிக்க அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளரே கண்டி பொலிஸ் எல்லைக்குள்ளும் அதற்கு அப்பாலும் பல விபசார நிலையங்களை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.