இரு தரப்பு பேச்சுவார்த்தைகளிற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இது தொடர்பான இறுதி ஏற்பாடுகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை.
ஜூலையில் ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல்தடவையாக ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
புதுவருடத்தில் இந்தியாவின் உயர்மட்ட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமையவுள்ளது.