நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பிலான விசேட நிகழ்ச்சியொன்று இன்றிரவு 10.30க்கு ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இதன்படி, அனைத்து உள்நாட்டு தொலைக்காட்சி சேவைகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய வங்கி ஆளுநர், திறைசேரி செயலாளர், இராஜாங்க அமைச்சர்களான ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய மற்றம் சேஹான் சேமசிங்க ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அதிலிருந்து மீள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.
ரூபவாஹினி, சுயாதீன தொலைக்காட்சி, ஹிரு, தெரண, சுப்ரீம், சிரச, சியத்த, சுவர்ணவாஹினி ஆகிய தொலைக்காட்சிகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.