தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை இராஜினாமா செய்து ஆணைக்குழுவை செயலிழக்கச் செய்யும் திட்டம் அரசாங்கத்திற்கு உள்ளதாக “சுதந்திர மக்கள் சபை”யின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
அண்மைய நாட்களில் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன் உறுப்பினர்களை நீக்கி ஆணைக்குழுவை முடக்குவதே சமீபத்திய முயற்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.