அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான USS Anchorage (LPD-23) கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான 2023 ஆம் ஆண்டுக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்காக இந்த கப்பல் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் SLNS Gajabahu மற்றும் SLNS Samudura ஆகிய கப்பல்கள் இந்த பயிற்சி நடவடிக்கையில் இணைந்துகொள்ளவுள்ளன.
208 மீற்றர் நீளமான Anchorage கப்பலில் 477 அமெரிக்க கடற்படையினரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
பயிற்சி நடவடிக்கையின் பின்னர் எதிரிவரும் 27 ஆம் திகதி இந்த கப்பல் நாட்டில் இருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.