மெக்சிகோவில் இரவு விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர்.
ஜெரெஸ் நகரில் உள்ள "எல் வெனாடிடோ" இரவு கேளிக்கை விடுதிக்கு 2 வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள், விடுதி ஊழியர்கள், இசைக் கலைஞர்கள், வாடிக்கையாளர்கள் என கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளினர்.
இதில், சம்பவ இடத்திலே ஆறு பேர் நிலைகுலைந்து உயிரிழந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இரண்டு பேர் பலியாகினர். இந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் மேலும், 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.