பிறப்பு சான்றிதழ் விண்ணப்பப்படிவத்திற்கு பதிலாக, மரண சான்றிதழ் விண்ணப்பப்படிவத்தை பயன்படுத்துமாறு பிரதேச செயலகமொன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு சான்றிதழ் விண்ணப்பப்படிவம் முடிவடைந்துள்ள நிலையிலேயே, பிரதேச செயலகமொன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
'பிறப்பு சான்றிதழ் விண்ணப்பம் முடிவடைந்துள்ளமையினால், மரண சான்றிதழ் விண்ணப்பப்படிவத்தில், பிறப்பு சான்றிதழ் என குறிப்பிட்டு, தேவையான தகவல்களை நிரப்புங்கள்' என பிரதேச செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடதாசி தட்டுப்பாடு காரணமாக, விண்ணப்பப்படிவங்கள் முடிவடைந்துள்ளமையினால், இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடதாசி தட்டுப்பாடு காரணமாக, பிறப்பு சான்றிதழ் விண்ணப்பப்படிவம் இதுவரை பிரதேச செயலகத்திற்கு கிடைக்கப் பெறவில்லை என அறிய முடிகின்றது.
நன்றி: ட்ரூ சிலோன்