Our Feeds


Tuesday, January 17, 2023

ShortNews Admin

ஊழல் குற்றச்சாட்டு : வியட்நாம் ஜனாதிபதி அதிரடியாக இராஜினாமா



வியட்நாம் ஜனாதிபதி நுயென் ஸுவான் புக் இராஜினாமா செய்துள்ளார் என அந்நாட்டு அரச ஊடகங்கள் இன்று (17) தெரிவித்துள்ளன. 


கம்யூனிய நாடான வியட்நாமில், ஊழல் விவகாரங்கள் காரணமாக ஜனாதிபதி நுயென் ஸுவான் புக் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என கடந்த சில தினங்களில் வதந்திகள் பரவிய நிலையில் அவர் இராஜினாமா செய்துள்ளார்.

அவரின் கீழ் பணியாற்றிய அதிகாரிகள் பலர் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தவறுகளை இழைத்துள்ளதாகவும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சுமத்தியிரு;நதது.

ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாக பல அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »