தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டலுடன் தொடர்புடைய தொலைபேசி இலக்கம் குறித்து விசாரணை நடத்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளன.
தொலைபேசி அழைப்புகள் மூலம் அச்சுறுத்தலுக்குள்ளான ஆணைக்குழு உறுப்பினர்கள் எஸ்.பி. திவாரட்ன மற்றும் கே.பி.பி. பத்திரன ஆகியோர் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு அமைய தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.