முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் காணி ஒன்றில் கிணற்றினை தோண்டும் போது கிணற்றில் இருந்து துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கிய தகவலையடுத்து
குறித்த பகுதிக்கு சென்ற சிறப்பு அதிரடிப்படையினர் துப்பாக்கிகளை மீட்டு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.
குறிப்பாக பழுதடைந்த துருப்பிடித்த நிலையில் இருந்த ஏ.கே துப்பாக்கி ஒன்றும் கைத்துப்பாக்கி ஒன்றுமே மீட்கப்பட்டுள்ளது.
இதனை நீதிமன்றில் சமர்ப்பிக்கும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.