வடக்கு ரயில்வே போக்குவரத்து நடவடிக்கைள் இன்று (ஜன.05) முதல் ஐந்து மாதங்களுக்கு அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹவ மற்றும் ஓமந்தை ஆகிய பகுதிகளுக்கு இடையிலான ரயில் தண்டவாள புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமையினால், கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மாத்திரமே ரயில் சேவை இடம்பெறும் என ரயில்வே பொது முகாமையாளர் W.A.D.S.குணசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளுக்கு அநுராதபுரத்தில் இருந்து பஸ்கள் மூலம் யாழ்ப்பாணம் செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.