அரசியலமைப்பு பேரவை முதன்முறையாக நாளை கூடவுள்ளது.
சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு பேரவை கூடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கலாநிதி பிரதாப் ராமானுஜன், கலாநிதி அனுலா விஜேசுந்தர மற்றும் கலாநிதி தினேஷ் சமரரத்ன ஆகியோர் அரசியலமைப்பு சபையின் மூன்று சிவில் பிரதிநிதிகளாக கடந்த வாரம் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த ஏனைய எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசியலமைப்பு சபைக்கு இதுவரை நியமிக்கப்படவில்லை.
எனினும், இந்த விடயமானது அரசியலமைப்பு பேரவை கூட்டத்திற்கு இடையூறை ஏற்படுத்தாது என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.