தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு ஜனாதிபதியுடன் ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதையடுத்து அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி இந்த சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.