அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் சந்தி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்று கண்டி ஏரியை பார்வையிட வந்தபோது ஏற்பட்ட பயங்கரமான அனுபவத்தை கையடக்கத் தொலைபேசியொன்றில் பதிவு செய்துள்ளது.
மகிந்த ஆரம்ப பாடசாலைக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது காட்டு யானை ஒன்று திடீரென இளைஞர்களை நோக்கி வந்ததையடுத்து இளைஞர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அருகில் உள்ள மரத்தில் ஏறியுள்ளனர்.
பின்னர் மரத்தின் மீது ஏறிய இளைஞர்கள் காட்டு யானை அந்த இடத்தில் மிகவும் பதற்றமாக நடந்துகொண்டதை வீடியோ எடுத்தனர்.
சில நிமிடங்களின் பின்னர், காட்டு யானை கண்டியில் உள்ள ஏரிக்கு அருகில் சென்றதையடுத்து, அந்த இளைஞர்கள் மரத்தில் இருந்து இறங்கி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீட்டுக்குச் சென்றனர்.