உள்ளுராட்சித் சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் கட்சிகளும், சுயேற்சைக் குழுக்களும் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்து முடித்துள்ளன.
எதிர்வரும் மார்ச் 9ம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில். முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்தும், சில இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டாகவும் தேர்தலை சந்திக்கிறது.
அந்த வகையில் அனுராதபுர மாவட்டம், கெக்கிராவை தேர்தல் தொகுதியில் பல முஸ்லிம் ஊர்களை கொண்ட பலாகல பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துக் களமிறங்கியுள்ளது.