40 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா செலுத்தி செயலற்றுப் போன செயற்கைக் கோள் ஒன்று நாளை பூமியில் விழ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பூமியின் கதிரியக்க ஆற்றல் குறித்து ஆய்வு செய்ய கடந்த 1984ஆம் ஆண்டு அமெரிக்கா செயற்கைக் கோள் ஒன்றை ஏவியது. இந்த செயற்கைக்கோள் செயலற்றுப் போனதால் நாளை பூமியில் விழும் என நாசா கூறியுள்ளது.
உள்ளூர் நேரப்படி நாளை காலை 5.10 மணியளவில் விழ வாய்ப்பு என்றும், வளிமண்டலத்தில் நுழையும் போதே முற்றிலும் எரிந்து விடும் எனவும் அமெரிக்க பாதுகாப்புத்துறை கணித்துள்ளது.