உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபா நட்டஈட்டை வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான பணத்தை சேகரிக்கும் வகையில் கலைஞர் சுதத்த திலகசிறி நேற்று (ஜன 17) கொழும்பு கோட்டையில் உண்டியல் குலுக்கி பண சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
இதன்போது திரட்டப்பட்ட 1,810 ரூபா பணத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் கையளிக்க தேவையான ஏற்பாடுகளை குறித்த கலைஞர் முன்னெடுத்துள்ளார்.
நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட 10 கோடி ரூபா நட்டஈட்டை செலுத்துமளவுக்கு தன்னிடம் சொத்துக்கள் இல்லை எனவும், அதனால் பணத்தை தனது நண்பர்களிடம் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி அண்மையில் குறிப்பிட்டார்.