ஊவா மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் நியமனக் கடிதங்களின் 'மை' காய்வதற்குள் நியமனங்களை இரத்துச் செய்துள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் உப தலைவரும் ஊவா மாகாண செயலாளருமான பிரியந்த வருசமான தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி ஊவா மாகாண ஆளுநரின் தலைமையில் ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் நிர்வாக சேவையில் 17 நியமனங்களுக்கான கடிதங்கள் வழங்கப்பட்டன.
ஆனால் ஊவா மாகாண ஆளுநர் அன்றைய தினம் மாலையே அரச நிர்வாக சேவையின் பதவிகள் தவிர்ந்த கல்வி நிருவாக சேவையின் சகல பதவிகளுக்கான நியமனங்களையும் இடமாற்றங்களையும் இரத்துச் செய்திருந்தார் என தெரிவித்துள்ளார்.