திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய் லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதை எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய்லாமா மததலைவர் என்ற போர்வையில் அரசியல்தலைமறைவு வாழ்க்கை வாழும் ஒருவர் அவர் சீனாவிற்கு எதிரான பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் அவர் திபெத்தை சீனாவிலிருந்து பிரிக்க முயல்கின்றார் என இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் மகாநாயக்க தேரர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக தலாய்லாமா இலங்கைக்கோ அல்லது வேறு எந்த நாட்டிற்கோ விஜயம் மேற்கொள்வதை எதிர்ப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மல்வத்தை பீடாதிபதி திப்பெட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை கண்டியில் சந்தித்தவேளை இலங்கைக்கான சீன தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஹியு வெய் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது இருநாடுகளினது மக்களிற்கும் இரு நாடுகளின் பௌத்தமக்களிற்கும் இடையில் பல நூற்றாண்டுகளாக காணப்படும் உறவுகள் குறித்து கருத்துபரிமாறப்பட்டதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் கொவிட் நெருக்கடி பொருளாதார நெருக்கடி போன்றவற்றை எதிர்கொள்வதற்காக இலங்கையின் அனைத்து தரப்பினருக்குமான சீனாவின் உதவிகள் குறித்தும் கருத்துபரிமாற்றம் இடம்பெற்றதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் தலாய் லாமாவின் இலங்கைக்கான விஜயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
சீன அரசாங்கமும் திபெத் மக்கள் உட்பட சீன மக்களும் எந்த பெயரிலும் எந்த வெளிநாடும் தலாய் லாமாவை அழைப்பதை எதிர்க்கின்றனர் என சீன தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் தலாய்லாமா தன்னை அழைத்துக்கொள்வது போல அவர் சாதாரண பௌத்த மதகுரு இல்லை ஆனால் 1951ம் ஆண்டிற்கு முன்னர் திபெத்தில் நிலப்பிரபுத்துவ அடிமைத்தனம் இறையாட்சியின் தலைவர் என சீன தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
தலாய்லாமா சீனாவிற்கு எதிரான பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் சீனாவிலிருந்து திபெத்திலிருந்து பிரிக்க முயலும் மதப்பிரமுகராக வேடமிட்ட நாடு கடந்த நிலையில் வாழும் அரசியல் பிரமுகர் எனவும் சீன தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.