களனி, பட்டிய சந்தியில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் தங்கியிருந்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சந்தேகத்தின் பேரில் களனிப் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.
இவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் கேரள கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் பெல்மதுல்ல பகுதியைச் சேர்ந்தவர்.
2018ஆம் ஆண்டு தெமட்டகொட பொலிஸில் பணிபுரிந்த அவர் பணி இடைநிறுத்தப்பட்டதாக பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.