ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்கவுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்த ஆதர்ஷா கரந்தன, பொலிஸ் கணினி குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராசிரியர் ஆஷு மாரசிங்க செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆதர்ஷா கரந்தன, தான் கைது செய்யப்பட்டால், பிணை அளிக்குமாறு கோரி சமீபத்தில் முன் பிணை மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.