Our Feeds


Thursday, January 19, 2023

ShortNews Admin

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் முறைப்பாடளிக்க 'தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ அலுவலகம்'



(எம்.மனோசித்ரா)


தேர்தல் காலப்பகுதிக்குள் அரச சொத்துக்களை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்கள் தொடர்பில் முறைப்பாடளிப்பதற்காக 'தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ அலுவலகம்' ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு அமைந்துள்ள கட்டடத்தின் இரண்டாம் மாடியில் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 011-2860056, 011-2860059, 011-2860069 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து முறைப்பாடுகளை வழங்க முடியும்.

மேலும் 011-2860057 மற்றும் 011-2860062 என்ற இலக்கங்களுக்கு தொலைநகல் ஊடாகவும் , 071 9160000 என்ற இலக்கத்தின் மூலம் வட்ஸ்அப் மற்றும் வைபர் ஊடாகவும் முறைப்பாடளிக்க முடியும். electionedr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதே வேளை உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கால வரையறை எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. எனினும் இறுதி திகதிக்கு முன்னர் சனி, ஞாயிறு வார இறுதி நாட்கள் என்பதால் தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கிடைப்பது தாமதமாகக் கூடும்.

எனவே நேற்று முதல் 23 ஆம் திகதி வரை உறுதிப்படும் விண்ணப்பங்களை மாவட்டங்களில் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் நேரடியாகச் சென்று கையளிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »