ஈரான் இராணுவத்துக்கு ஆயுதங்கள் தயாரித்தளிக்கும் தொழிற்சாலை மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்பஹான் அருகே உள்ள அந்த தொழிற்சாலையில் இரவு நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதலில் உயிர் சேதமோ அல்லது மிகப்பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்படவில்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்த வந்த ட்ரோன்களில் ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், மேலும் 2 ட்ரோன்கள் பாதுகாப்பு பொறிகளில் சிக்கி வெடித்ததாகவும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
தாக்குதலை நடத்தியது யார் என தெரியாத நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக ஈரான் அரசு குறிப்பிட்டுள்ளது.