Our Feeds


Thursday, January 12, 2023

Anonymous

அவுஸ்திரேலியாவில் பாலியல் சர்ச்சையில் சிக்கிய தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு - அவுஸ்திரேலிய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 



இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணையை அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது.


இந்நிலையில் அவருக்கு எதிரான வழக்கின் விசாரணையை 2023 பெப்ரவரி 23 ம் திகதி வரை ஒத்திவைத்துள்ள அவுஸ்திரேலிய நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


போலிஸார் தங்களின் சாட்சியங்களை இறுதி செய்யகூடிய வகையில் இந்த உத்தரவு பிறபிக்கப்படது.


31 வயதான தனுஷ்க, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தார்.


இதன் போது டேட்டிங் செயலியான டிண்டரில் சந்தித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.


சிட்னி டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றில், நீதவான் டேவிட் பிரைஸ், இன்று இந்த வழக்கை பெப்ரவரி 23-ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


தனுஷ்க பெப்ரவரியில் நீதிமன்றில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


எனினும் அவருக்கான கடுமையான நிபந்தனைகள் மற்றும் இரவு நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு என்பன தொடர்கின்றன.


அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள பெண்ணை தொடர்பு கொள்ள அனுமதியில்லை.


மேலும் அவர் சமூக ஊடகங்கள் அல்லது டேட்டிங் செயலிகளை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுவதில்லை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »