இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (23) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை இன்றைய தினத்திற்குள் மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு கொண்டு வந்து வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.