கடுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடாரத்வத்த மாவத்தை பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் நேற்று (14) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் 50க்கும் 65 வயதுக்கும் இடைப்பட்ட ஆண் எனவும், சடலம் முற்றாக சிதைவடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.