தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு மரண
அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைபேசியையும் பரிசோதிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.ரணில் விக்கிரமசிங்கவின் தொலைபேசியையும் பரிசோதிக்க வேண்டும் என தான் நினைப்பதாகவும், அவர் ஒவ்வொரு இரவும் அழைப்பு விடுத்தாரோ தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார்.
அச்சுறுத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி யாருடையது என்பதுதான் இப்போது தேட வேண்டியுள்ளது எனவும் அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
திசைக்காட்டியின் எழுச்சியால் பல கட்சிகள் தற்போது பீதியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.