கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 45,000 ரூபா போஷாக்கு உணவு கொடுப்பனவை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 20,000 ரூபாவாக போசாக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம் இந்த வருடம் 45,000 ரூபாவை வழங்கும் திட்டமாக திருத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கர்ப்ப காலத்தில் 6 மாதங்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது 4 மாதங்கள் என 10 மாத காலத்திற்கு புதிய திட்டம் பலன்களாக வழங்கப்பட உள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மாதாந்தம் 4500 ரூபா வீதம் 10 மாதங்களுக்கு போஷாக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.