கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடலில் தீப்பிடித்து எரிந்த எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலை கொண்டுசெல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கப்பலின் மீட்பு நடவடிக்கைகளை சீனாவில் உள்ள ஷாங்காய் சால்வேஜ் (Shanghai Salvage) என்ற நிறுவனம் மேற்கொள்கிறது.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடலில் சுமார் இரண்டு வாரங்கள் எரிந்து மூழ்கியது.
இந்நிலையில், தற்போது குறித்த கப்பலின் பாகங்கள் எடுத்துச் செல்லப்படுவதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழுவின் தலைவர் தர்ஷனி லஹதபுர தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.