வத்தளை மற்றும் நுகேகொடையில் உள்ள லைசியம் சர்வதேச பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலை வளாகத்திற்கு முன்பாக கடந்த இரு தினங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேம்பிரிட்ஜ் பிரிவு O/L மற்றும் A/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஏற்பாடுகளை செய்ய முடியாது என பாடசாலை நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.