குருநாகலில் மக்களை ஏமாற்றி அவர்களின் ATM அட்டைகளின் PIN இலக்கத்தை பெற்றுக்கொண்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று (29) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் நரகத்தில் அமைந்துள்ள வங்கிகளின் ATM இயந்திரங்களுக்கு அருகில் காத்திருந்து பணத்தை வைப்பிலிட வந்தவர்களை ஏமாற்றி ATM அட்டையின் இரகசிய இலக்கத்தை சந்தேகநபர் பெற்றுக்கொண்டுள்ளார்.
பின்னர், வேறு ATM அட்டையை அவர்களிடம் வழங்கிவிட்டு, இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டிகாபால பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், இன்று (30) குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.