Our Feeds


Tuesday, January 10, 2023

News Editor

ATM கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் அதிகாரி கைது



காலி பிரதேசத்தின் பல பகுதிகளில் ATM இயந்திரங்களில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் களுத்துறை – மீகஹதென்ன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் பல்கேரிய பிரஜைகள் இருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பொலிஸ் கணினி குற்றத்தடுப்புப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »