இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 75 கோடி ரூபா பெறுமதியிலான 75 பஸ்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கையளித்தார்.
பத்தரமுல்ல ஜப்பான் நட்பு மாவத்தை பகுதியில் நேற்று (ஜன 05) இந்த நிகழ்வு இடம் பெற்றது.
இதன்போது கருத்துரைத்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன,
போக்குவரத்து துறை முக்கிய தருணத்தை தற்போது எதிர்கொண்டுள்ளது. கிராமிய வீதிகளுக்கு பொருத்தமான வகையில் இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 75 பஸ்களைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 75 கோடி பெறுமதியிலான 75 பஸ்களைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 75 ஆவது சுதந்திரத்தை முன்னிட்டு இந்த பஸ்களைகள் சகல டிபோக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.
500 புதிய பஸ்களை இவ்வருடத்தில் பொது போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்வில் இந்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கலந்துக் கொண்டார்.