நேபாளத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த 40 பேரில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
15 வெளிநாட்டு பிரஜைகள் உள்ளடங்களாக 68 பயணிகள் மற்றும் 4 விமானப் பணியாளர்களுடன் பயணித்த விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
காத்மண்டு விமான நிலையத்திலிருந்து பொங்காரா விமான நிலையத்திற்கு சென்ற விமானம், பொங்காரா விமான நிலையத்தில் தரையிறக்கும் போது, விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தை அடுத்து, விமானத்தில் தீ பரவியுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 200ற்கும் அதிகமான மீட்பு பணியாளர்கள் தொடர்ந்தும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.