பாகிஸ்தானில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கிலோ 6500 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
கோதுமை மாவுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடால் பாகிஸ்தான் தற்போது நெருக்கடியை சந்தித்து வருகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அரசாங்கம் குறைந்த விலையில் கோதுமை மாவு வழங்கி வரும் நிலையில், அதனை வாங்க முயன்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உள்பட 4 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு போதுமான அளவு கோதுமையை இருப்பு வைக்காததே தற்போதைய பிரச்சினைக்கு காரணமென பாகிஸ்தான் அரசு மீது அந்நாட்டு மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.