பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பஸ்ஸின் சாரதி பஸ்ஸை மண்மேட்டில் மோதச் செய்து பஸ்சை நிறுத்தி 50க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹப்புத்தளை, பெரகலை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென பிரேக் செயலிழந்துள்ளது. இதனையடுத்து பஸ் கீழ்நோக்கிச் செல்லும் போது, வலதுபுறம் உள்ள பள்ளம் ஒன்றின் குறுக்கே மண்மேட்டினை பிடித்து பஸ்சை நிறுத்தியுள்ளார் சாரதி.
இந்நிலையில், தனது உயிரைப் பணயம் வைத்து சாரதி இந்தச் செயலில் ஈடுபட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.