Our Feeds


Friday, January 27, 2023

Anonymous

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை - நாடு முழுவதும் 48,257 மாணவர்கள் சித்தி - மாவட்ட ரீதியிலான பட்டியல் இணைப்பு

 



2022 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 48,257 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.


டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் மொத்தம் 329,668 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.


புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அதிகளவான மாணவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


மாகாண ரீதியாக சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை விபரம் இதோ!


  • மேல் மாகாணம்- 10,585
  • தென் மாகாணம்- 6,812
  • வடமேல் மாகாணம்- 6,601
  • சப்ரகமுவ மாகாணம்- 5,170
  • மத்திய மாகாணம்- 5,017
  • வடமத்திய மாகாணம்- 3,957
  • ஊவா மாகாணம்- 887
  • கிழக்கு மாகாணம்- 3,479
  • வட மாகாணம்- 2,749


பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 20,000 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »