திருகோணமலை - புல்மோட்டை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இந்த சம்பவத்தில் காயமடைந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் இன்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
புல்மோட்டை பகுதியில் விவசாய காணி எல்லை பிரச்சினை காரணமாக இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.
சம்பவத்தில் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 42வயதான இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த 4 பேர் புல்மோட்டை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகைளை புல்மோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.