Our Feeds


Wednesday, January 25, 2023

ShortNews Admin

குவைத்திலிருந்து அழைத்துவரப்பட்ட 47 இலங்கை பெண்கள்



குவைத்தில் வீட்டுப் பணிப் பெண்களாக பணிபுரிந்தபோது பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியதாகக் கூறப்படும் 47 இலங்கைப் பெண்கள் இன்று (25) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

 

குறித்த 47 இலங்கை பணிப்பெண்களும் குவைத்தில் பணிபுரியும் போது தமது எஜமானர்களால் பல்வேறு இன்னல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகி, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

இதேவேளை, சுமார் 1,300 இலங்கை பெண்கள் இலங்கைக்கு வரமுடியாமல் குவைத்தில் தங்கியிருப்பதாக அந்நாட்டு இலங்கை தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

இலங்கைக்கு வர எதிர்பார்க்கும் இவர்களை விரைவில் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »