பங்களாதேஷுக்கு 4.7 பில்லியன் கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது. எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு இது உதவும் என நம்பப்படுகிறது.
கடந்த வருடம் பங்களாதேஷில் ஒரு நாளில் 13 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டமை குறிபபிடத்தக்கது.
சர்வதேச நாணய நிதியதின் கடனுதவியின் கீழ் பங்களாதேஷ் அரசுக்கு உடனடியாக 476 மில்லியன் டொலர்கள் கிடைக்கவுள்ளது. எனினும், இது வரி அதிகரிப்பு மற்றும் வங்கித்துறையில் மீட்கப்பட முடியாத கடன்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் போன்றவற்றை மேற்கொள்ள வைக்கும்.
பங்களாதேஷில் உத்தியோகபூர்வ பணவீக்கம் 8.7 சதவீதமாக உள்ளது. எனினும் உண்மையான வீதம் மேலும் அதிகமாக இருக்கலாம் என சுயாதீன பொருளியலாளர்கள் கூறுகின்றனர்.