Our Feeds


Tuesday, January 31, 2023

ShortNews Admin

பாகிஸ்தான் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு - பலி எண்ணிக்கை 83 ஆக உயர்வு!



பாகிஸ்தானின் பெஷாவர் நகரின் பள்ளிவாசலொன்றில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பெஷாவர் பொலிஸ் தலைமையதக்திலுள்ள பள்ளிவாசலுக்குள் நேற்று பிற்பகல் தொழுகையின்போது பாரிய குண்டுவெடித்தது. 

இத்தாக்குதலில் 59 பேர் உயிரிந்தனர் எனவும் 150 பேர் காயமடைந்துள்ளனர் எனவும்  நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது என  வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நேற்று இரவும் சடலங்கள் கொண்டுவரப்பட்டதாக பெஷாவரின் லேடி றீடிங் வைத்தியசாலை பேச்சாளர் முஹம்மத் ஆசிம் கான் தெரிவித்துள்ளார்.   

பாகிஸ்தான் தலிபான் என அறியப்படும் தெஹ்ரீக் ஈ தலிபான் பாகிஸ்தான் இயக்கம் இத்தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் தமது தளபதி உமர் காலித் குராசனி கொல்லப்பட்டமைக்கு பதிலடியாக இத்தாக்கதல் நடத்தப்பட்டதாக அந்த இயக்கம் கூறியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »