Our Feeds


Saturday, January 14, 2023

News Editor

பிரான்ஸிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 46 இலங்கையர்கள்


 

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பயணித்து பிரான்ஸின் ரீயூனியன் தீவிற்குள் நுழைய முற்பட்ட 46 இலங்கையர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.


கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி, நீண்டநாள் மீன்பிடி படகு மூலம் நீர்கொழும்பிலிருந்து சென்றவர்கள் ரீயூனியன் தீவிற்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.


43 ஆண்கள், இரு பெண்கள், ஒரு சிறுவன் உள்ளிட்ட 46 பேர் கடந்த 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.


13 முதல் 53 வயதிற்குட்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் , மட்டக்களப்பு, சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.


விமானம் மூலம் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட 46 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


தெஹிவளையை சேர்ந்த ஒருவரே இந்த ஆட்கடத்தலுடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


ஒருவரிடமிருந்து இரண்டு இலட்சம் ரூபா முதல் வெவ்வேறு தொகை பணம் அறவிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »