இலங்கை 140 மருந்துகளிற்கான தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
புற்றுநோயாளர்களிற்கான 43 மருந்துகள் உட்பட 140 மருந்துகளிற்கான தட்டுப்பாட்டை நாட்டின் சுகாதார அமைப்பு முறை எதிர்கொள்கின்றது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருந்து தட்டுப்பாடு சுகாதார சேவைகளை முடக்கியுள்ளது நோயாளர்களிற்கு கடும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.
தட்டுப்பாடாக உள்ள மருந்துகளை பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்;டுள்ள போதிலும் கொடுப்பனவுகள் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் புற்றுநோயாளர்களிற்கான 43 மருந்துகளை பெற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன அவை விரைவில் நாட்டை வந்தடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அவசியமான நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.