நாளை (12) முதல் மறு அறிவித்தல் வரை நாளொன்றுக்கு 42 புகையிரத பயணங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரதங்களை இயக்க போதிய பணியாளர்கள் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பிரதான மார்க்கத்தில் 20 புகையிரத பயணங்களும், புத்தளம் பாதையில் 04 பயணங்களும், களனிவெளி மார்க்கத்தில் 02 புகையிரத பயணங்களும், கடலோர மார்க்கத்தில் 16 புகையிரத பயணங்களும் இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.