நானுஓயாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பஸ்ஸில் பயணித்த 41 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் வேனில் பயணித்த 6 பேரும், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த பஸ் பள்ளத்தில் வீழ்ந்திருப்பதால், மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.