எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்துள்ள "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எமது உரிமைகளைப் பாதுகாப்போம்" எனும் தலைப்பினாலான நான்காவது பயிற்சிப் பட்டறை நேற்று 2023.01.06 ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை மட்டக்களப்பு மாவட்ட செயலகம், கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது
இப்பயிற்சிப் பட்டறையில் ஊடகவியலாளர் மற்றும் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன் அடைந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் "உபாலி அபேரத்ன" மற்றும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான சட்டத்தரணி "கிஷாலி பின்டோ ஜயவர்தன", சட்டத்தரணி "ஜகத் லியன ஆராச்சி", "ஏ. மொஹமட் நஹியா" மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக செயலாளர் "நவேஸ்வரன்" கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்விற்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்திற்கு "அவுஸ்திரேலியன் எயிட் நிறுவனம்" அனுசரணை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.